காதலி அமைவதெல்லாம் 3

Tamil Sex Stories இவன் அவளை பார்த்ததும் முகத்தை திருப்பி கொண்டாள், இவனும் திரும்பிவிட்டான்.அசோக், அய்யோ! இவ எப்படி இங்க வந்தா, கோவில்ல பாக்கும்போதே பயமா இருந்துச்சு, இப்ப என்னோட கிளாஸ்லயே படிக்க வந்துட்டா. . என்று பயந்தான்.

ஆனாலும் திரும்ப அவளை பார்க்க முடியுமா என்று நினைத்து கொண்டிருந்தவனின் மனதிற்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.

அப்போது பேராசிரியர், அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தார், ஸ்டூடெண்ட்ஸ் நான் தான் உங்க வகுப்பு ஆசிரியர் சுந்தரமூர்த்தி.

இந்த வகுப்பில் உள்ள நிறை, குறைகள்…உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் என்னிடம் தாரளாமாக தெரிவிக்கலாம். . .

இன்னக்கி தான் எல்லாரும் முதல் நாள் வந்துருக்கீங்க, அதனால ஒவ்வொருத்தரா முன்னால வந்து உங்களை அறிமுகம் செஞ்சுகோங்க என்றார்.

முதலில் பெண்கள் பகுதியில் இருந்து அவள் எழுந்து சென்று முன்னால் நின்றாள்.

அசோக் அவள் பெயர் என்னவென்று சொல்லபோகிறாள் என்ற ஆவலில் அவளையே பார்த்துகொண்டு இருந்தான், இவனை பார்த்த அவளும் சிறிது நேரம் பேசாமலே நின்று கொண்டிருந்தாள்.

பேராசிரியர் ஹ்ம் உன்ன பத்தி சொல்லுமா என்றார்.

அவளும் உடனே பேச ஆரம்பித்தாள். . .ஹலோ ப்ரண்ட்ஸ், குட் மார்னிங்,
என்னோட பெயர் “தேன்மொழி” என்று பேச ஆரம்பித்தாள்,

பெயர்க்கு ஏற்றார் போல் அவள் பேசிய ஓவ்வொரு வார்த்தையும் தேன் போல என் காதில் பாய்ந்து கொண்டிருந்தது, அப்படி ஒரு இனிமை.

அவளுடைய பெயர் மட்டுமே எனது காதில் ஒலித்துகொண்டிருந்தது, அவளை ரசித்து கொண்டிருந்ததில், அவள் பேசிய பேச்சு எதுமே என் மனதில் நிற்கவில்லை.

அவள் பேசி முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தாள், பேராசிரியர் ஏதும் பார்த்து விட்டால் என்ன செய்வது என்று அவளை நான் திரும்பி பார்க்கவே இல்லை.

எல்லா பெண்களும் ஒருவர் பின் ஒருவராக தங்களை பற்றி சொல்லி கொண்டிருந்தனர். எதுவும் என்காதில் விழவில்லை,தேன்மொழியை தவிர எவரது முகமும் என்னை ஈர்க்கவில்லை.

அப்பொழுதுதான், என்மனதில் தோன்றியது இவள்தான் எனக்காக பிறந்த தேவதையோ. . .! என்று.

அப்போது பேராசிரியர், யாருப்பா முதல் பெஞ்ச்ல இருக்குறது, உங்கள போயி அறிமுகம் செஞ்சுகோங்க என்றார்.

திரும்பி பார்த்தேன் பெண்கள் வரிசை முடிந்தது, அடுத்து நான் தான் பேசவேண்டும்.

ஒரு வேகத்தில் நான் தான் சார் என்று தைரியத்தை வரவலைத்துக்கொண்டு முன்னே சென்று நின்றேன்.

பள்ளியில் சில பேச்சு போட்டியில் கூட்டத்தின் முன் பேசி அனுபவம் இருந்தாலும், அங்கே பெண்கள் யாரும் இருந்ததில்லை, இங்கே அப்படி இல்லை.

பெண்கள் முன் எப்படி பேசபோகிறேன் என்று கை கால் உதறியது.

தேன்மொழியை பார்த்தேன் அவள் நான் எப்போது என்னுடைய பெயரை சொல்லபோகிறேன் என்ற ஆவலோடு இருப்பது போல் எனக்கு தோன்றியது.

சரி பெண்கள் பக்கம் பார்த்தால்தானே பேசமுடியவில்லை, ஆண்கள் பக்கம் மட்டும் பார்த்து பேசி விடலாம் என்று முடிவு செய்து பேச ஆரம்பித்தேன்.

என் பெயர் அசோக். . .என்று ஆரம்பித்து என்னை பற்றி சொல்லிமுடித்து, வேகாமாக வந்து உட்கார்ந்துகொண்டேன், மறுபடியும் அவளை திரும்பி பார்க்கவில்லை.

இப்படியே அனைவரும் பேசிமுடித்தோம். இறுதியாக அந்த வகுப்பு முடிந்தது, அடுத்த வகுப்பு ஆசிரியர் வந்தார், நேராக பாடம் எடுக்க சென்று விட்டார்.

அதனை அனைவரும் கவனித்து கொண்டிருந்தோம், அதோடு மனதில் தேன்மொழியை எப்போது திரும்பி பார்ப்பது என்ற ஆவலும் இருந்தது.

என் அருகில் இருந்தவர்களுடனும் என்னால் பேச முடியவில்லை. இப்படியே தொடர்ந்து எல்லா வகுப்புகளும் பாடத்துடனே சென்றது.

ஒருவழியாக உணவு இடைவேளை வந்தது. . .எனது அருகில் இருந்தவர்கள் இருவரை பற்றி விசாரித்தேன்.. . தேன்மொழியை பற்றி நினைத்ததில் அவர்கள் பேசியதை நான் கவனிக்கவில்லை…அதில் ஒருவன் பெயர் முத்து, இன்னொருவன் பெயர் பாலா.

இருவரும் சிறுவயது முதல் நண்பர்கள் ஒன்றாகவே இப்பொழுதும் சேர்ந்து படிக்கிறார்கள்.

அப்போது எனது நண்பன் கோபியின் நினைவு வந்தது…இருக்கட்டும் அவனுக்கு அந்த கல்லூரி நல்லாதான் இருக்கும் என்று சமாதானம் படுத்திகொண்டான்.

அதன்பின்பு மதியம் லஞ்ச் எங்க சாப்பிட போறிங்க என்று கேட்டேன். கேண்டீன் செல்ல வேண்டும் என்று இருவரும் கூறினர். ஏன் என்று கேட்டதும்தான் தெரிந்தது…

அவர்கள் இருவரும் 2 மணிநேர தொலைவில் உள்ள கிராமத்தில் இருந்து வருவதால் வீட்டில் உணவு சமைப்பது கடினம்.

அதனால் காலையும், மதியமும் இங்கயே சாப்பிடவேண்டும் என்று கூறினார்.

என்னை கேட்டனர் நான் வீட்டில் இருந்து எடுத்து வந்துள்ளேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அந்த இனிமையான குரல் கேட்டது…

ஹலோ..! அசோக் என்று தேன்மொழிதான் என்னை அழைத்தாள்…

இவளே வந்து என்னை அழைக்கிறாளே என்ற ஒரு பயம் கலந்த சந்தோஷத்தில் திரும்ப முயன்றேன்.

அதற்குள் நாங்க சாப்பிட்டு வருகிறோம் என்று முத்து, பாலா இருவரும் விடைபெற்றனர்.

சரி என்று மெதுவாக திரும்பினேன்…அவளது முகத்தை பார்த்தேன் அழகாக சிரித்துக்கொண்டே கேட்டாள், ஏன் என்னை திரும்பி பாக்குறதுக்கு இவ்வளவு நேரம்.

நான் சமாளித்தேன், இங்கே பேசிக்கொண்டு இருந்ததால் கவனிக்கவில்லை.

வேறு ஏதும் பேசத்தெரியாமல் உங்க பேரு என்னவென்று கேட்டேன்.

காலையில் தானே சொல்லினேன் அதற்குள் மறந்துவிட்டதா என்று சிரிக்காமல் கேட்டாள்.

அச்சசோ, இப்ப என்ன பண்றது உனக்குல்லாம் பொண்ணுங்க கூட பேசவே வராதுடா, நீ சுத்த வேஸ்டு என்று என்னை நானே மனதில் திட்டிகொண்டேன்.

இல்ல சும்மா சொன்னேன் உங்க பேரு தேன்மொழி தானே…

இப்பவாச்சும் ஞாபகம் வந்துச்சே என்று மெதுவாக சிரித்தாள். அந்த சிரிப்பிர்கே பலர் மயங்கி விடுவர்…

நான் மட்டும் என்ன விதிவிலக்கா என்று நினைத்துகொண்டேன்.

திரும்பவும் அவள் பேச முயன்றாள், அதற்குள் அவள் அருகில் இருக்கும் தோழிகள் வாடி சாப்பிடலாம் என்று அழைத்தனர்.

சரி இதோ வரேன், என்று சொல்லிவிட்டு அசோக் நீங்களும் வாங்க சாப்பிடலாம் என்று அழைத்தாள்.

நானும் ஒரு வெட்கத்துடன் சாப்பிட சென்றேன்.

அங்கே இவங்க பேரு மலர், காவ்யா என்று அவளது தோழிகளை அறிமுகம் செய்து வைத்தாள்.

இன்னும் இவளே எனக்கு அறிமுகம் ஆகவில்லை, அதற்குள் அனைவரையும் அறிமுக படுத்துகிறாளே என்று நான் வியந்தேன்.

சாப்பிடும் போது நாங்கள் நால்வரும் என்ன பேசுவது என்று தெரியாமல், காலையில் நடந்த வகுப்புகளை பற்றி பேச ஆரம்பித்தோம்.. அவர்களும் என்னுடன் சகஜமாக பேச ஆரம்பித்தனர்.

அப்போதுதான் எனக்கு புரிந்தது பெண்களை பார்த்து பயந்த எனக்கு, பேசியதும் பயம் போயி விட்டதே என்று.

இனிமேல் நம்ம வாழ்கையே மாறப்போகுது என்று நினைத்து கொண்டு சாப்பிட்டு முடித்தேன்.

தேன்மொழியும் சாப்பிட்டு எழுந்தாள், நானும் எழுந்து வந்து என்னுடைய இடத்தில உட்கார்ந்தேன்.

பின்பு மதிய வகுப்பு ஆரம்பிக்க இருந்த காரணத்தினால் அனைவரும் எழுந்து அவரவர் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.

தேன்மொழியிடம் பேச சரியான சந்தர்பம் அமையவில்லை என்று அவளை திரும்பி பார்தேன். அவளும் அதே சிரிப்புடன் என்ன பார்த்தாள்.

அதற்குள் முத்துவும், பாலாவும் சரியாக வகுப்பிற்கு வர, பேராசிரியரும் உள்ளே நுழைந்தார், அவர் வகுப்பை ஆரம்பித்துவிட்டார். அதனால் இருவருடன் மீண்டும் பேச முடியவில்லை.

நான் முதல் பெஞ்சில் இருந்த ஒரே காரணத்தினால் தான் ஏதும் பேசமுடியவில்லை ஆசிரியர் பார்த்தால் என்ன செய்வது என்ற பயம் தான்.

ஆனாலும் தேன்மொழி நம்ம பக்கத்துல இருக்காளே என்று நினைக்கும் போது, அது மனதில் ஒரு புது சக்தியை உண்டாக்கியது.

யாரென்றே தெரியாதவள் மீது இவ்வளவு ஈர்ப்பு ஏன் ஏற்பட்டது, எல்லாம் விதியாகத்தான் இருக்க முடியும் என்று மகிழ்ச்சியடைந்தேன்.

இப்படியே வகுப்புகள் அனைத்தும் நடந்தது, பேராசிரியர்கள் யாரும் நேரத்தை வீணடிக்காமல் பாடத்தை சரியாக முடித்தனர்.

மாலை 4 மணிக்கு வகுப்புகள் அனைத்தும் முடிந்தது. முத்து, பாலா இருவரும் எங்கள் ஊர் பேருந்திற்கு நேரமாகிவிட்டது என்று கூறிவிட்டு விடைபெற்றனர்.

சரி என்று தேன்மொழியை பார்த்தேன். அவளது தோழிகளும் அவளை விடைபெற்று சென்றனர்.

தேன்மொழி கேட்டால் இன்னும் கிளம்பலயா என்று, ஹ்ம்ம் கிளம்பனும் பைக் இருக்கு என்றேன்.

அவளோ சரி நானும் கெளம்பனும், கார் வந்துருக்கும், டிரைவர் வெயிட் பண்ணிட்டு இருப்பார் என்று கூறினாள்.

அப்பொழுதுதான் புரிந்தது அவள் மிகவும் வசதியுள்ள பெண் என்று
ஆனால் அவளது உடையோ மிகவும் எளிமையாக இருந்தது.

இருவரும் வகுப்பறையை விட்டு ஒன்றாக நடந்து வெளியே வந்தோம்.

அப்போது தெரியாமல் என்னுடைய தோள் அவள் மீது உரசியது.

உடனே தேன்மொழி கூச்சத்தில் நெளிந்தாள்.

எனக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது, என்ன சொல்லவது திட்டபோகிறாள் என்று பயந்தேன்.

நான் என்ன மன்னிச்சுடு தேன்மொழி, தெரியாம இடிச்சுட்டேன் என்றேன்.

பரவாயில்ல விடு என்று சகஜம் அடைந்தாள்.

நான் அவளை ஒரு அரை அடி இடைவெளி விட்டு சேர்ந்து நடக்க தொடங்கினேன்.

எதுவும் எங்களுக்கு பேச தோணவில்லை. அவளுடைய கார் வந்தது.

நாளை சந்திக்கலாம், பை அசோக் என்று என்னை விடைபெற்றாள்.

அவளது கார் செல்லும் திசையை பார்த்தேன் அது நான் வீட்டிற்கு செல்லும் திசைக்கு எதிர் திசையில் சென்றது.

அதன்பின் என்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டேன்.

அவளை பற்றி எதுவுமே கேக்க முடியவில்லையே, அவகிட்ட பேசுறதுக்கு இனிமே நேரம் கிடைக்குமோ, இல்லையோ என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.

வரும் வழியில் என்னோட தம்பி சுரேஷயும் பள்ளியில் இருந்து அழைத்து வீட்டிற்கு வந்தேன்.

இருவரும் வீட்டிற்குள் நுழைந்தோம். , ,அம்மா கேட்டாள், கிளாஸ் எப்படிடா போச்சு, எல்லாம் உனக்கு புடிச்சுருக்கா என்று. . .நல்ல பிடிச்சுருக்குமா என்று தேன்மொழியை மனதில் நினைத்து கொண்டே சொன்னேன்.

ரெண்டு பேரும் போயி பிரெஷ் ஆகிட்டு வாங்க டீ போட்டு தரேன் என்று சமையல் அறைக்கு போனாள்.

நான் என்னுடைய அறைக்கு சென்றேன், அப்பொழுது நண்பன் கோபியின் நினைவு வந்தது.

அவனுக்கு கால் பண்ண மொபைல் எடுக்கும் பொழுது அவனே என்னுடைய போனிற்கு அழைத்தான்.

சொல்லுடா கோபி என்று பேச ஆரம்பித்தேன். . .